வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (11:27 IST)

தண்ணீர் குடிக்கும் போது பல்லை விழுங்கிய பெண்… உயிரிழந்த சோகம்!

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் பல் வயிற்றுக்குள் சென்றதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ராஜலட்சுமி. இவர் சில தினங்களுக்கு முன்னர் பல் மருத்துவமனையில் புதிதாக 3 பற்கள் செயற்கையாகக் கட்டிக்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தண்ணீர் குடிக்கும் போது அதில் இருந்த ஒரு பல் கழண்டு வயிற்றுக்குள் சென்றுள்ளது.

இதனால் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.