செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (18:53 IST)

ஐ.எஸ்.எல். கால்பந்து: புள்ளிப்பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை அணி!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வியும் ஒன்றில் டிராவும் செய்துள்ளது 
 
கடந்த 23ம் தேதியுடன் கோவா அணியுடன் விளையாடிய சென்னை அணி 0-3 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து மும்பை அணியுடன் கடந்த ஞாயிறன்று விளையாடிய போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது
 
எனவே சென்னை அணி ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியை டிரா செய்ததை அடுத்து மொத்தத்தில் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது
 
கோவா, நார்த் ஈஸ்ட் யூனைடெட், மும்பை ஆகிய மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகள் எடுத்து முதல் மூன்று இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கோவா மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் இந்த போட்டியும் டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை சென்னை அணி ஏ.டி.கே அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் மேலே வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது