செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (10:13 IST)

சென்னை மாநிலக்கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: உச்சகட்ட பாதுகாப்பு...!

presidency college Chennai
சென்னை மாநில கல்லூரி மாணவர் சுந்தர் என்பவர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வேலையாகி உள்ளது
 
சென்னை மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தர் உயிரிழந்த விவகாரம் காரணமாக போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,  பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதோடு. மின்சார ரயில் வழித்தடத்திலும் தீவிர கண்காணிப்பு
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு. ரயில்களில் இறங்கி வரும் மாணவர்களின் அடையாள அட்டைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
 
மேலும் சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.  ஏற்கனவே இவ்வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு (20), யுவராஜ் (20), ஈஸ்வர் (19), ஹரி பிரசாத் (20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran