புதன், 11 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (08:07 IST)

நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம்,மஹத் ராகவேந்திரா மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள் CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் கலந்து கொண்டனர்!

CTMA (Confederation of Tamil Nadu Malayalee Association) சமீபத்தில் சென்னையில் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் பண்டிகை இது. வயநாடு நிலச்சரிவின் போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு சிறப்பு முயற்சியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே. சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
 
தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார். இவர்களுடன் நடிகர்கள் மஹத் ராகவேந்திரா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 
 
இந்நிகழ்வில் பி.கே. சேகர் பாபு பேசுகையில்...... 
 
தேவைப்படுபவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ள இந்தக் கொண்டாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆவணிப்பூவரங்கு 2024 மூலம் பெறப்படும் நிதி, நிலச்சரிவுகளால் இடம்பெயர்ந்த வயநாட்டில் வசிப்பவர்களுக்கு ஆதரவளிக்க ஒதுக்கப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற முன்னெடுப்புகள் ஊக்கம் தருகிறது என்றார். 
 
டாக்டர் எம்.மதிவேந்தன் கூறுகையில்..... 
 
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உன்னத நோக்கத்துடன் ஆவணிப்பூவரங்கு 2024 கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்விற்கு காரணமான ஒட்டுமொத்த குழுவிற்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
என்றார். 
 
ருசியான ஓணம் சத்யா, இரு குழுக்களுக்கு இடையேயான பாரம்பரிய கயிறு இழுத்தல், வண்ணமயமான பூக்கோளம் போட்டி, பிரமாண்ட நடனம், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பல வேடிக்கையான நிகழ்வுகளுடன் இந்த இரண்டு நாள் பண்டிகை நிகழ்வு கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகமான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தனர்.