செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (08:34 IST)

பொது இடங்களில் குப்பை கொட்டினால் On Spot அபராதம்! - டிஜிட்டல் கருவிகளை வாங்கும் சென்னை மாநகராட்சி!

Chennai Corparation

சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்க டிஜிட்டல் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வரும் நிலையில் குப்பை மேலாண்மை சவாலுக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. எனினும் சென்னை மாநகராட்சி குப்பை மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கே வந்து குப்பைகளை வாங்கி செல்லும் அளவிற்கு பல வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

 

ஆனாலும் பல இடங்களில் பொதுவெளியில் குப்பைகளை கொட்டுவதும், கட்டிட வேலைபாடுகளின் எச்சங்களை கொட்டுவதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் இதற்காக விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையையும் சென்னை மாநகராட்சி உயர்த்தி அறிவித்தது. 
 

 

இந்நிலையில் தற்போது பொதுவெளியில் குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக ஆன் ஸ்பாட் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க பயன்படுத்தும் டிஜிட்டல் கருவி போன்ற புதிய டிஜிட்டல் கருவியை வாங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக 500 கருவிகளை சோதனை அடிப்படையில் வாங்கவும், பின்னர் இந்த முறையை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K