ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 9 அக்டோபர் 2024 (07:48 IST)

ஆயுதபூஜை விடுமுறை: சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

Train
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அக்டோபர் 11 முதல் ஆயுத பூஜை விடுமுறை அளிக்கப்பட இருப்பதை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன.

ஏற்கனவே சென்னையிலிருந்து சுமார் 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயில் சென்னையில் இருந்து நாளை, அதாவது அக்டோபர் 10ஆம் தேதி, மற்றும் அக்டோபர் 12ஆம் தேதி புறப்படுகிறது என்றும், இதே ரயில் நாகர்கோவிலிலிருந்து அக்டோபர் 11 மற்றும் 13ஆம் தேதி புறப்பட்டு சென்னை திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலுக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva