திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (09:19 IST)

பைக்கை நிறுத்திய காவலர்; கம்பியால் தாக்கிய மர்ம நபர்கள்! – சென்னையில் பரபரப்பு!

சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை மர்ம நபர்கள் கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸார் தினசரி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் தலைக்கவசம் இல்லாமல் வருவது, வாகன சான்றிதழ்கள் ஆகியவற்றை சரிபார்க்கும் அவர்கள் விதிமுறைகளை மீறி இருந்தால் அபராதமும் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் எஸ்.ஐ சங்கர் என்பவர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அந்த வாகனத்தில் சென்ற மூன்று பேர் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றதுடன் காவலர் சங்கரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலரை தாக்கி விட்டு தப்பிய 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். வாகன சோதனை செய்த காவலர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K