செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (17:27 IST)

96’ படத்தை தீபாவளிக்கு வெளியிடுவது நியாயமே இல்லை - த்ரிஷா கொதிப்பு

’96’ படத்தை தீபாவளிக்கு தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருந்தால் நன்றியுடன் இருப்பேன் என த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘96’. நந்தகோபால் தயாரித்து இருந்தார். வெளியான இப்படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக இன்றும் சூப்பராக இருக்கிறது. இப்போதும் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
 
இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் வாங்கி உள்ள சன் தொலைக்காட்சி நிறுவனம், வரும் தீபாவளி (நவம்பர் 6) அன்று மாலை 6:30 மணிக்கு ‘96’ ஒளிபரப்பப்படும் என்று நேற்று விளம்பரப்படுத்தியது. இதனால் ரசிகர்கள்  சந்தோஷத்தில் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.  ஆனால்  படக்குழுவினரோ அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
 
இது தொடர்பாக த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
படம் வெளியாகி இது எங்களுக்கு 5வது வாரம். இன்னும் அனைத்து திரையரங்குகளிலும் 80 சதவீதம் நிரம்புகிறது. இவ்வளவு சீக்கிரம் 96 படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். தயவு செய்து இதை பொங்கலுக்கு தள்ளி வையுங்கள் என்பது எங்கள் கோரிக்கை. அவ்வாறு செய்தால் நன்றியுடன் இருப்பேன் என்று த்ரிஷா கூறியுள்ளார்.