1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. US Second Lady Usha Reveals Her Children Are Big Fans of PM Modi

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

அமெரிக்கா
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மனைவி உஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், "எனது குழந்தைகள் இந்திய பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகர்கள்," என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமெரிக்காவின் இரண்டாவது லேடி உஷா வான்ஸ், "என் பிள்ளைகள் பிரதமர் மோடியை மிகவும் விரும்புகிறார்கள்" என்றும், "நாங்கள் பிரதமர் மோடியின் இல்லத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் பெற்றபோது என் குழந்தைகள் ஓடிச்சென்று மோடியை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்" என்றும், "அது ஒரு இனிமையான அனுபவம்" என்றும் தெரிவித்தார்.
 
"மோடி ஒரு சிறப்பான மனிதர்" என்றும் கூறிய அவர், "இந்தியாவில் எங்களது சுற்றுப்பயணம் மிகவும் மறக்க முடியாத அனுபவமாக நிகழ்ந்தது" என்றார். குறிப்பாக, "இந்தியாவில் நாங்கள் ஒரு பொம்மலாட்ட காட்சியை பார்த்தோம். அதில் பொம்மலாட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தன,  அதெல்லாம் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவமாக இருந்தது" என்றும் உஷா வான்ஸ் தெரிவித்தார்.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!