வியாழன், 6 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 மார்ச் 2025 (20:24 IST)

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 4,88,876 பள்ளி மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள், 272 கைதிகள் என மொத்தம் 9,13,036 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வை எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி 10ஆம் வகுப்பு மாணவர்களின் ஹால்டிக்கெட் வரும் மார்ச் 14-ம் தேதி மதியம் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே  தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து பிறகு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஹால்டிக்கெட்டில் ஏதாவது தவறுகள் இருந்தால், அதனை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அதேபோல், தேர்வுப் பட்டியலில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, மொழி போன்ற விவரங்களில் திருத்தம் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி மாற்றம் செய்ய வேண்டும்.

இதற்கான வழிமுறைகளை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva