வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (19:45 IST)

சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளதாவது:

சென்னை மெரினா கடற்கரை சாலையில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 21 ஆம் தேதி சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன்பு உள்ள காவலர் நினைவு இடத்தில்  காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே வரும் 18 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.