1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (11:34 IST)

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: அதிர்ச்சி தகவல்..!

சென்னை பாரிஸ் கார்னரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பழைய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது சென்னை பெரம்பூர் சாலையில் பழைய கட்டிடம் இருந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிஷ்டவசமாக இடிந்து விழுந்த கட்டிடத்தில் யாரும் வசிக்கவில்லை என்பதால் யாருக்கும் காயம் இல்லை என்று தகவல் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 
 
நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான இந்த கட்டிடத்தை எடுக்க மூன்று மாதத்திற்கு முன்பு அனுமதி பெறப்பட்டதாகவும் மாநகராட்சி சார்பில் தடுப்பு பலகை அமைக்கப்பட்டு இருந்ததால் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கட்டிட ஈடுபாடுகளை அகற்றும் பணியில் தற்போது ஈடுபட்டு இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva