1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological says about rain

இன்னும் 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

rain
இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை காணப்பட்டாலும் கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இன்று ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை சிவகங்கை தஞ்சாவூர் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தான் காணப்படும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!