1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (16:45 IST)

கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

highcourt
கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறப்பது குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்ததை அடுத்து அந்த பள்ளி பொதுமக்களால் சூறையாடப்பட்டது. இதனை அடுத்து அந்த பள்ளி முழுமையாக மூடப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் படிப்படியாக இந்த பள்ளி திறக்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் முதல் வாரத்தில் இருந்து எல்கேஜி உள்பட அனைத்து வகுப்புகளையும் தொடங்கவும் குழந்தைகளின் தைரியத்திற்காக பெற்றோரையும் பள்ளிக்கு வர அனுமதிக்கவும் பள்ளி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பெற்றுள்ளது. 
 
கள்ளக்குறிச்சி பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் வகையில் பள்ளியை முழுமையாக திறக்க சென்னை ஹைகோர்ட் அனுமதி வழங்கி உள்ளதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சி பள்ளி மூடப்பட்டிருந்ததன் காரணமாக மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளி திறக்கப்படும் உத்தரவை சென்னை ஐகோரப்பித்துள்ளதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran