1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological says about rain

இன்னும் சில மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

rain
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்னும் சில மணி நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யும் என்றும் கணித்து விட்டது 
 
மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் வாய்ப்பு இருப்பதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
கலகலக்கும் சார் தாம் யாத்திரை; ஒரு மாதத்தில் 18 லட்சம் பக்தர்கள் பயணம்!