1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

மாலை 4 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Chennai Rain
தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
காற்றின் வேக  மாறுபாடு, வளிமண்டல சுழற்சி உள்பட பல்வேறு காரணங்களால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் மாலை 4 மணி வரை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி! பயணிகள் மகிழ்ச்சி..!