ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (07:45 IST)

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம்! தேதி அறிவிப்பு..!

சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த போட்டி உலக அளவில் கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் மீண்டும் சென்னையில் கார் பந்தயம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் மூன்றாம் சுற்று போட்டிகள் சென்னையில் செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தயம் ஓடுதளத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்று போட்டிகள் இதே ஓடுதளத்தில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் சுற்று போட்டிகள் இரவு நேர பந்தயமாக தீவுத்திடலில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற பார்முலா 4 போட்டிகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த போட்டிக்கும் அதே போன்ற வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva