1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

30ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கனமழை
ஏப்ரல் 30ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழைக்குவாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்திக் கொண்டு வந்தாலும் இன்னொரு பக்கம் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில்  ஏப்ரல் 30ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு உடுத்திய உடையோடு வந்துள்ளோம்: சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் கண்ணீர்..!