1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (10:38 IST)

7 நாட்களுக்கு வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

இன்று முதல் ஏழு நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை வெயில் உக்கிரமாக இருந்தது என்பதும் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதை அடுத்து வெப்பம் தணிந்து உள்ளது. இந்த நிலையில் இந்திய அளவிலும் வெப்பம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனை அடுத்து முதல் ஏழு நாட்களுக்கு இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு இந்தியாவில் வெப்ப அலை இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் வெயில் சற்று கடினமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran