1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

இன்னும் சிலமணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

meteorological
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தற்போது தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதன் காரணமாக ஏற்கனவே வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மோர்பி விபத்துக்கு காரணமானவர்கள் பாஜகவுடன் தொடர்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு