திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (02:38 IST)

மாமன்னன் பற்றி பேசும்போது, தக்காளி பற்றி பேசக்கூடாதா? சென்னை மேயரிடம் பத்திரிகையாளர் கேள்வி..!

குறைந்த விலையில் தக்காளி கிடைக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்யுமா என்று பத்திரிகையாளர் கேட்டபோது தக்காளி என் டிபார்ட்மெண்ட் இல்லை என்று சென்னை மேயர் பிரியா அவர்கள் பதில் கூறினார்
 
அதற்கு பத்திரிக்கையாளர் மாமன்னன் குறித்து பேசும்போது தக்காளி விலை குறித்து ஏன் பேசக்கூடாது என்ற கேள்வி எழுப்பிய போது மேயர் ப்ரியா அவர்கள் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார் 
 
தக்காளி விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தமிழக அரசு தக்காளி விலையை பசுமை பண்ணைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. மேலும் ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனையாகிறது 
 
இந்த நிலையில் சென்னை மேயர் பிரியா இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக அரசு செய்வது போல் சென்னை மாநகராட்சியும் தக்காளி விலை குறைக்க நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டது
 
அப்போது தக்காளி என் டிபார்ட்மெண்ட் இல்லை, ஹாஸ்பிடல், ரோடு, கல்வி ஆகியவற்றைப் பற்றி கேளுங்கள் என்று கூறியபோது, மாமன்னன் திரைப்படம் குறித்து பேசும்போது தக்காளி விலை கொடுத்து ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டார் 
 
இதனை அடுத்து சென்னை மேயர் ப்ரியா சிரித்து கொண்டே செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran