1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From today five days rain in tamil nadu

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

மழை
தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
காதலியை உயிருடன் புதைத்த விவகாரம்- நீதிமன்ற விசாரணையில் அதிர்ச்சித் தகவல்