1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (16:53 IST)

''உண்மை தோற்பதில்லை''- ஓபி.ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்ட ஈவிகேஸ். இளங்கோவன் கருத்து!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள  நிலையில் இதுபற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஓபி ரவீந்திரநாத் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளார் என்றும் அதனால் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் தேனி தொகுதி வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்

இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆனால் அதே நேரத்தில் இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் ஒத்தி வைத்துள்ளார்.

இதுகுறித்து தேதி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்துப்  போட்டியிட்ட போட்டியிட்ட  காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளதாவது: எதைச் செய்தும் வெற்றி பெற்றுவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் முடிவில் இப்படித்தான் தீர்ப்புகள் வரும், அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அவர்களுக்கு வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், உண்மை தோற்பதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, உயர் நீதிமன்றத்தின்  இத்தீர்ப்பை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.