திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (08:33 IST)

குடியுரிமை போராட்டத்தில் கலந்து கொண்ட ஐஐடி மாணவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட சென்னை ஐஐடி மாணவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை ஐஐடி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 
ஜேக்கப் லின்டென்தல் என்ற மாணவரும் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் அவர் பங்கேற்ற போது சர்ச்சைக்குரிய ஒரு பதாகையை அவர் கையில் ஏந்தி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து குடியுரிமை துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
விசாரணைக்கு பின்னர் அவர் விசா விதிகளை மீறி உள்ளதால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டார். இதனை அடுத்து சென்னையில் இருந்து அவர் நேற்று மாலையே பெங்களூர் திரும்பினார் 
 
நாடு திரும்பும் அவர் அளித்த பேட்டியில் சட்டரீதியிலான ஒரு போராட்டத்தில், மனித உரிமைக்கான ஒரு போராட்டத்தில், தான் தான் கலந்து கொண்டதாகவும், ஆனால் இதனை அதிகாரிகள் ஏற்கவில்லை என்றும் எனவே தான் ஜெர்மனிக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்