பெயரை மாற்ற முடியாது! – சென்னை நீதிமன்றம் கறார்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்ற மத்திய அரசால் அனுப்பப்பட்ட பரிந்துரையை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் ‘மெட்ராஸ் நீதிமன்றம்’ என்ற பெயரிலேயே இதுவரை உள்ளது. அரசு ஆவணங்கள், அலுவலக முத்திரைகள் அனைத்திலும் ‘மெட்ராஸ்’ என்ற சொல்லே குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் பெயரே சென்னை என்று மாறிவிட்ட சூழலில் மெட்ராஸ் நீதிமன்றத்தின் பெயரையும் ‘தமிழ்நாடு நீதிமன்றம்’ என மாற்றலாம் என மத்திய சட்ட அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரை ஒன்றை அளித்தது.
இதனை ஏற்று விவாதித்த நீதிபதிகள் மெட்ராஸ் நீதிமன்றம் என்ற பெயரை மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அதன் நீதி வழங்கல் துறை மெட்ராஸ் நீதிமன்ற சராகத்தை உள்ளடக்கியது என்பதால் தனியாக தமிழ்நாடு என்று மட்டும் சொல்லிவிட முடியாது என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.