ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (16:48 IST)

தபாங் படத்தை விட சிஏஏ முக்கியமானது.. கதாநாயகி கருத்து

“தபாங் 3” திரைப்படத்தின் வசூலை விட குடியுரிமை சட்ட போராட்டம் குறித்த விவாதம் மிகவும் முக்கியம் என அத்திரைப்படத்தின் கதாநாயகி சோனாக்‌ஷி சின்ஹா கூறியுள்ளார்.

சல்மான் கான் நடித்து பிரபு தேவா இயக்கத்தில் வெளியான “தபாங் 3” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 24.5 கோடி வசூல் செய்தது. எனினும் குடியுரிமை திருத்த சட்டத்தால் “தபாங் 3” திரைப்படம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த, “நாட்டில் என்ன நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும், எது முக்கியம் என்று மக்களுக்கு தெரியும், நாடு முழுவது நடைபெறும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் ஒரு திரைப்படத்தை விட முக்கியமானது” என கூறியுள்ளார்.

மேலும் போராட்டம் குறித்து கேள்வி கேட்ட போது, ”நான் இந்த நாட்டு மக்களுடன் இருக்கிறேன். அவர்களது உரிமை குறலை நீங்கள் பறிக்க முடியாது” எனவும் கூறியுள்ளார். சோனாக்‌ஷி சின்ஹா, முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.