1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai highcourt order about ops case

ஓபிஎஸ் விடுதலையை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை உயர் நீதிமன்றம்
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை, ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
கடந்த 2021ம் ஆண்டும் ரூ.1.77 கோடி சொத்து சேர்த்த வழக்கை திரும்பப் பெற அனுமதித்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை விடுவித்த சிவகங்கை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் மறு ஆய்வு செய்கிறது 
 
இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மீண்டும் மோடி பிரதமராக 80 சதவீத இந்தியர்கள் ஆதரவு.. அமெரிக்க நிறுவனத்தின் கணிப்பில் தகவல்..!