செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (14:30 IST)

ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

H Raja
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதான, 'பெரியார் சிலையை உடைப்பேன்' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டது, திமுக எம்பி., கனிமொழிக்கு எதிரான தரக்குறைவாகப் பேசியது, அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்ப பெண்கள் பற்றி தவறாகப் பேசியது  உள்ளிட்ட பல 11 வழக்குகளில் எதையுமே ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்துள்ளது.

ஹெச்.ராஜா மீது தமிழகத்தின் பல்வேறு   காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து 3 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டுமென்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கீழமை நீதிமன்றத்திற்கு  இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஹெச்.ராஜா இப்படி பேசுவது முதல் முறையல்ல. அவர் பேச்சு தனிப்பட்டை நபர்களை மட்டுமின்றி அனைவரையும் பாதிக்கக்கூடிய வகையில் இருக்கிறது,. அவர் மீது நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்குத் தொடரமுடியும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.