1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai highcour case about advocate fight

சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்: தாமாக முன்வந்து விசாரிக்கும் ஐகோர்ட்..!

வழக்கறிஞர்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை எழும்பூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை மற்றொரு வழக்கறிஞர் மாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது 
ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தின் அடிப்படையில் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரியும், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
 
இந்த முறையீடை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கறிஞர்கள் இடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து தாமாக முன் வந்து விசாரிக்கும் என்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நான் நிரபராதி என்று ஸ்டாலின், உதயநிதி சொல்லுங்கள்.. தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம்..!