ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (13:34 IST)

கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயரை எழுத உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..

கன்வார் யாத்திரை செல்லும் இடங்களில்  கடை உரிமையாளர்களின் பெயரை எழுத வேண்டும் என்ற அரசின் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

யாத்திரை செல்லும் வழியில் உள்ள கடைகளில், உரிமையாளர்களின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்  என்று உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவு, பொருளாதார ரீதியாக சிறுபான்மையினரை தனிமைப்படுத்தும் என  கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் உ.பி, உத்தரகாண்ட் மாநில அரசின் உத்தரவுக்கு  எதிர்ப்பு தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட்  ஆகிய இரண்டு மாநில அரசுகளின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முதல்கட்ட விசாரணையில் உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட்  உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுக்கு  இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran