அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தலத்தை இடிக்க உத்தரவு! – உயர்நீதிமன்றம் அதிரடி!
காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்ட வழிபாட்டு தலத்தை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வழிபாட்டு தலம் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் வழிபாட்டு தலம் கட்ட ஆட்சேபம் ஏதும் இல்லாததால் அது அங்கு கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம் “யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதற்காக அரசு நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்கலாமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிமன்றம், அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தலத்தையும் இடிக்க உத்தரவிட்டுள்ளது.