1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (13:30 IST)

பாஜக கல்யாணராமன் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? – நீதிமன்றம் கேள்வி!

பாஜக கல்யாணராமன் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? – நீதிமன்றம் கேள்வி!
சமூக வலைதள அவதூறு கருத்து சர்ச்சையில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமனின் வழக்கில் நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை தொடுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் அவர் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கல்யாணராமன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “பாஜக பிரமுகர் கல்யாணராமன் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? அவர் நீதிமன்றம், சட்டம், காவல்துறை போன்றவற்றை மதிக்கமாட்டாரா?” என்று சரமாரி கேள்விகளை எழுப்பியதுடன், வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.