செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (11:47 IST)

இன்ஸ்டாக்ராம் பழக்கம்; மூன்றே நாளில் காதல்! – சிறுமிக்கு நேர்ந்த சோக சம்பவம்!

சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான நபரை பார்க்க சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூரை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழகிய மூன்றே நாட்களில் இருவரும் காதலிப்பதாய் கூறிக்கொண்ட நிலையில் காதலனை பார்க்க திருவள்ளூர் சென்றுள்ளார் அந்த சிறுமி.

சிறுமியை சந்தித்த சிறுவன் அவளை தனது நண்பன் வீட்டிற்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்ததுடன், சிறுவனின் நண்பனும் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான். இதனால் மனவேதனை அடைந்த சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி சில நாட்கள் ஆன நிலையில் தனக்கு நிகழ்ந்த சோகத்தை பெற்ரோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறுவனை சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பிய நிலையில் சிறுவனின் நண்பனையும் தேடி வருகின்றனர்.