திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 ஜனவரி 2025 (09:27 IST)

ஒரே நாடு ஒரே நேரம்.. வரைவு விதிகளை வெளியிட்ட மத்திய அரசு..!

Clock
நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஒரே நாடு ஒரே நேரம் பின்பற்றுவதை கட்டாயமாக்கும் வகையில் மசோதா இயற்றப்பட இருக்கிறது. இதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பிப்ரவரி 14-ஆம் தேதி பொது மக்களிடம் கருத்து கேட்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு, வங்கி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உட்பட அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒரே நேரத்தை பின்பற்றுவதை உறுதிப்படுத்த விதிகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். வர்த்தக, நிதி, நிர்வாக சட்ட ஒப்பந்தங்கள் என அனைத்து விதமான பயன்பாடுகளிலும் இந்திய ஒரே இந்திய நேரத்தை மட்டுமே பின்பற்ற இந்த மசோதா வலியுறுத்துகிறது.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒரே நேரத்தை பயன்படுத்துவது குறித்த வரைவு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில் வானியல், கடற்பயணம், அறிவியல் ஆய்வு ஆகிய துறைகள் முன் அனுமதி பெற்று விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய இயற்பியல் ஆய்வகம் மற்றும் இஸ்ரோ உடன் இணைந்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம்  ஒரே நாடு ஒரே நேரம் மசோதாவை கணக்கில் எடுத்துள்ளது. இது குறித்து அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva