1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai domestic flights cancelled

ஊரடங்கால் குறைந்த பயணிகள் – சென்னையில் 126 விமானங்கள் ரத்து!

Tamilnadu
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உள்நாட்டு விமான சேவை அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் சென்னையில் விமானங்கள் ரத்தாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் அவசர தேவை கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல மாநிலங்களிலும் ஊரடங்கு இருப்பதால் பலர் பயணங்களை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இன்று சென்னைக்கு சில விமான சேவைகள் நடந்தாலும், மிகவும் குறைவான பயணிகள் கொண்ட விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று மட்டும் சென்னையிலிருந்து புறப்பட இருந்த மற்றும் சென்னைக்கு வரவிருந்த 126 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
முயல் வேகத்தில் செயல்படுங்கள்… தமிழக காங்கிரஸ் தலைவர் கோரிக்கை!