பாஜக மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு! – எல்.முருகன் அறிவிப்பு!
தமிழகத்தில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்குவதாக எல்.முருகன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு பாஜக தமிழகத்தில் பெற்றுள்ள வெற்றி இதுவாகும். தேர்தலுக்கு முன்னதாக பாஜக வெற்றிக்காக சிறப்பாக செயல்படும் பாஜக மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் பரிசளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பாஜக வென்ற 4 இடங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் பரிசளிப்பதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.