1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai deepawali bus reservation

தீபாவளி பண்டிகை - 28 ஆயிரம் பேர் முன்பதிவு

deepawali buses
தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல். 
 
ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தீபாவளி கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.
 
இந்நிலையில் இந்த ஆண்டும் தமிழக போக்குவரத்து துறையின் அரசு விரைவு பேருந்துகள், ஏசி பேருந்துகள், சொகுசு பேருந்துகள் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டது.
 
இதனிடையே தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
உள்ளாட்சி தேர்தல் - கல்லூரிகளுக்கு விடுமுறை!