1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (18:01 IST)

நாளை தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி

நாளை மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
மகாளய அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.
 
இந்நிலையில் நாளை மகாளய அமாவாசை நாளில் ஆறு, குளம், நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் மக்கள் தர்பணம் செய்ய கடற்கரைகளுக்கோ, நீர் நிலைகளுக்கோ, கோவிலுக்கோ செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.