1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 மே 2024 (16:06 IST)

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னையில் தெரு நாய் கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதை அடுத்து நாய் வளர்ப்பவர்கள் மாநகராட்சி இடம் லைசென்ஸ் பெற வேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. மேலும் பொதுமக்களை நாய் கடித்தால் நாயின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் நாய்கள் மட்டுமின்றி மாடுகள் முட்டியும் பலர் காயமடைந்தும் உயிரிழந்தம் ஏற்பட்டு வருவதை அடுத்து மாடுகள் வளர்க்கவும் லைசன்ஸ் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி விரைவில் உத்தரவிட இருப்பதாக கூறப்படுகிறது.  
 
மாடுகள் வளர்ப்பவர்கள் அதை சாலைகளில் மேய விடுவதால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதியில் உள்ளனர் என்றும் குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்வோர் வேலைக்கு செல்பவர்களுக்கு பெரும் இடைஞ்சலாக கால்நடைகள் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது 
 
இதனை அடுத்து மாடுகள் வளர்ப்பவர்களும் லைசன்ஸ் எடுக்க வேண்டும் என்ற நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran