புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 மே 2024 (14:15 IST)

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

நடந்துவரும் ஐபிஎல் சீசனில் சி எஸ் கே அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் கடைசி கட்டத்தில் சொதப்பி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. சி எஸ் கே அணியைப் பொறுத்தவரை ரசிகர்கள் தோனி பேட்டிங் செய்வதைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் அளவுக்கு சி எஸ் கே வெற்றிக்கு ஆர்வமாக இருக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

இந்நிலையில் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு அதிருப்தியில் இருந்த தோனி, வீரர்களோடு கைகுலுக்காமலே தனது ஓய்வறைக்கு திரும்பிவிட்டார். இந்நிலையில் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள சி எஸ் கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “தோனி ஓய்வு பற்றி எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. அவர் சொல்லவும் மாட்டார். அவர் தானாகவே முடிவெடுப்பார்.” எனக் கூறியுள்ளார். தோனி இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் சில மாதங்கள் கழித்து முடிவெடுப்பார் எனவும் சொல்லப்படுகிறது.