வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (11:45 IST)

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை: சென்னை மாநகராட்சி நிபந்தனை

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க சென்னை மாநகராட்சி நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. வருங்காலத்தில் சாலை விரிவாக்கத்திற்கு இடம் தேவைப்பட்டால் 'சிலை அகற்றபடும்' என்ற நிபந்தனையுடன் கருணாநிதி சிலை வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது

இந்த நிபந்தனையை திமுக ஏற்றுக்கொண்டதை அடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட இன்னும் பல தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.