1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Commisioner dismissed two policemen

மாஸ்க் அணியாத மாணவர் மீது தாக்குதல் – காவலர்கள் சஸ்பெண்ட்

Chennai
சென்னையில் முகக்கவசம் அணியாத விவகாரத்தில் மாணவரை தாக்கிய காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்ற சட்டக் கல்லூரி மாணவர் ஒருவருடன் காவலர்கள் இருவருக்கு வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் காவலர்கள் அந்த மாணவரை தாக்கிய சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து மாணவரை தாக்கிய கான்ஸ்டபிள் பூமிநாதன் மற்றும் முதல் நிலை காவலர் உத்திரக்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
உயர்ந்தது தங்கத்தின் விலை: ரூ.37,000-த்தை நெருங்கும் அபாயம்!