தொடர்புடைய செய்திகள்
- முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- சென்னையில் வங்கதேசத்தின் துணைத் தூதரகம்: பேச்சுவார்த்தை தொடக்கம்!
- விஜய் படத்துக்காக சென்னையில் தயாராக உள்ள பிரம்மாண்டமான வீடு! தளபதி 66 அப்டேட்!
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை ராணுவ வீரர் மஹீஷ் தீக்ஷன? BoycottChennaiSuperKings ட்ரெண்டாவது ஏன்?
- தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
இன்று தொடங்குகிறது 45வது புத்தக கண்காட்சி: சென்னை மக்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் புத்தக கண்காட்சி காலதாமதமானது
இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்க இருப்பதாக பபாசி அறிவித்துள்ளது. இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் புத்தகக் காட்சியை தொடங்கி வைப்பதாக பபாசி அறிவித்துள்ளது
45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்குகிறது என்றும் ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றும் பபாசி அறிவித்துள்ளது
ஏற்கனவே புத்தக கண்காட்சிக்கு இ-டிக்கெட் ஆன்லைனில் விற்கப்பட்டு வரும் நிலையில் நேரில் வருபவர்களுக்கும் டிக்கெட் வழங்கப்படும் என பபாசி தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
