1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:53 IST)

சென்னையில் வங்கதேசத்தின் துணைத் தூதரகம்: பேச்சுவார்த்தை தொடக்கம்!

சென்னையில் வங்கதேசத்தின் துணைத் தூதரகம்: பேச்சுவார்த்தை தொடக்கம்!
வங்கதேசத்தின் தூதரகம் ஏற்கனவே டெல்லியில் இருக்கும் நிலையில் சென்னையில் துணைத் தூதரகம் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
வங்கதேசத்திலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஏராளமானோர் சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் இதையடுத்து சென்னையில் வங்கதேசத்தின் துணை தூதரகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் வங்கதேச வெளியுறவுத்துறை செயலாளர் விரைவில் இந்தியா வருகை தர இருப்பதாகவும் சென்னையில் வங்கதேச துணை தூதரகம் அமைப்பது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வங்கதேச துணை தூதரகம் சென்னைக்கு வந்துவிட்டால் சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது