ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 மார்ச் 2022 (20:03 IST)

சென்னை புத்தக கண்காட்சி: கடைசி நாளில் 50% வரை தள்ளுபடி!

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் முடிவடைந்தது 50% வரை புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
45வது சென்னை புத்தகக்காட்சி இன்றோடு நிறைவடையும் நிலையில், கடைசி நாள் என்பதால் சில அரங்குகளில் 10% முதல் 50% வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் புத்தக விற்பனை சூடுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இதுவரை புத்தகக் கண்காட்சியில் 12 கோடி ரூபாய்க்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும், 8 லட்சம் மாணவர்கள் உட்பட 15 லட்சத்திற்கும் மேலான வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்திருப்பதாகவும் பபாசி தெரிவித்துள்ளது