1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (11:21 IST)

நகை கடன் தள்ளுபடி : நாளை முதல் நகைகளை பெறலாம்... தமிழக அரசு!

நாளை முதல் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் தங்களின் நகைகளை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு. 

 
திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. 
 
இந்நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்து இன்று முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என  தமிழக அரசு தெரிவித்துள்ளது. 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற  22.52 லட்சம் பேரில், 10.18 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக  கூட்டுறவு அதிகாரிகள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.