1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (13:48 IST)

சென்னையில் கூட்டணி; நெல்லையில் தனித்தனி..! – திமுக, காங். கூட்டணி!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் வெளியீடு என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

திமுக – காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரையில் இடங்கள் ஒதுக்குவது குறித்து மாவட்ட அளவில் பேசி முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேசமயம் திருநெல்வேலியில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படாததால் , திருநெல்வேலியில் உள்ள 3 நகராட்சிகள், 13 பேரூராட்சிகளில் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபோல பல மாவட்டங்களிலும் கூட்டணியா? தனித்தனியா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.