வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (09:26 IST)

இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்கள் முழுவதும் ரத்து! - பயணிகள் அவதி!

Electric Train

தாம்பரம் பணிமனை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகளை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

 

 

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்ததால் கடந்த மாதம் பல மின்சார ரயில்கள், வெளியூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது, வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தாம்பரம் வழியாக ரயில்கள் வழக்கம்போல இயங்கி வந்தன.

 

இந்நிலையில் இன்று தாம்பரம் பணிமனை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை இன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 

அதேநேரம் பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

 

இன்று விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைகள் கடற்கரைகளில் கரைக்கப்பட உள்ள நிலையில் மக்கள் கடற்கரை நோக்கி செல்லும் நிலையில், இந்த மின்சார ரயில்கள் ரத்து பயணிகளுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K