1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center warning about rain

தமிழகம், புதுவையில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Chennai Rain
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகம் புதுவை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும், செப்டம்பர் 18ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வேலூர் சிறைத்துறை டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! கைதி சித்ரவதை விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை.!!