வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (14:07 IST)

சென்னையில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை: 100 டிகிரி F ஆக இருக்கும்: வானிலை அறிவிப்பு..!

Heat
சென்னையில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் சில பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னை மக்கள் அதிர்ச்சிகள் உள்ளனர்.

சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சில நாட்கள் மழை பெய்து வந்தாலும் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த இரண்டு நாட்கள் ஆக அதிக வெப்பநிலை இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமான வெப்பநிலை இன்று நாளையும் இருக்கும் என்றும் 100 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் இருப்பது போன்ற வெப்பம் தற்போது சென்னையில் இருந்து வருவதை அடுத்து பொதுமக்கள் அவதியில் உள்ளனர் என்பதும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Edited by Siva